மதுரை எய்ம்ஸ் – கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து முதற்கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ள…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து முதற்கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என்ற
எதிர்பார்ப்பு கிளம்பியது.

மத்திய அரசு வருகின்ற 2026ம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிறைவடையும் என அறிவித்திருந்தது. ஆனாலும் பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசின் பொதுப் பணித்துறை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டர் எடுக்க விரும்பும் நிறுவனங்கள் செப்டம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.