மதுரை அதிமுக மாநாடு; போக்குவரத்து மாற்றம்…

அதிமுக மாநாட்டை முன்னிட்டு மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு காரணமாக மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து…

அதிமுக மாநாட்டை முன்னிட்டு மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு காரணமாக மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர், வாடிப்பட்டி வழியாக சென்னை செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரை வழியாக நெல்லை கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம், திண்டுக்கல் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது மாநாட்டிற்கு வரும் அதிமுகவினரின் வாகனங்கள் மதுரை மாநகருக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.