கடல் அடியில் காதல் திருமணம்!

புதுச்சேரியில் ஆழ்கடலில் திருமணம் செய்து காதல் ஜோடி விழிப்புணர்பு ஏற்படுத்தி உள்ளனர்.

சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஆழ்கடல் பயிற்சி
நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவரது மாணவி தீபிகா என்பவர்
அந்நிறுவனத்தில் ஆழ்கடல் பயிற்சியாளராக உள்ளார்.

சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாரா க்ளேடிங் செய்து, தனது காதலை வெளிப்படுத்திய தீபிகா, தற்போது கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நீருக்கடியில் திருமணமும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

தீபிகாவும், ஜான் டி பிரிட்டோ என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், தற்போது புதுச்சேரி கடல் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் 50 அடி ஆழத்தில் திருமணம் செய்து கொண்டனர். கடல் அடியில் செய்யப்பட்ட திருமண அலங்காரங்களுக்கு மத்தியில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, “காற்று மாசுபாடு மற்றும் கடல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் ஆழ்கடல் பயிற்சியாளரான நாங்கள் இதனை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.