நடிகர் அர்ஜுன் ‘ஜெய் ஹிந்த்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘வேதம்’, ‘ஏழுமலை’ என 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் இவர் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் ‘சீதா பயணம்’. இப்படத்தை ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திலும் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாதான் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.







