உங்கள் மொபைல் தொலைந்துவிட்டதா? நீங்களே கண்டுபிடிக்க உதவும் புதிய AI தொழில்நுட்பம்!

உங்கள் தொலைந்து போன மொபைலை நீங்களே கண்டுபிடிக்க உதவும் AI தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட OpenAI-ன் ChatGPT, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.…

உங்கள் தொலைந்து போன மொபைலை நீங்களே கண்டுபிடிக்க உதவும் AI தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட OpenAI-ன் ChatGPT, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சாட்ஜிபிடி என்றழைக்கப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் (Chatbot), நாம் வைக்கும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு, பதில்களை கொடுக்கும் ஒரு விரிவான மொழிக் கருவியாகும். இது, தொழில்நுட்பத்தில் ஏற்படும் பரிணாம வளர்ச்சியின் புதிய நிலைகளுக்கு, நம்மை தயார்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தொலைந்து போன மொபைலை நீங்களே கண்டுபிடிக்க உதவும் AI தொழில்நுட்பத்தை  அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபைல் போன்கள் நம் வாழ்வின் ஒரு அங்கம், ஆனால் அவை ஒரு நாள் திருடப்பட்டால் என்ன செய்வது?…

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் “Sanchar Saathi”  போர்டல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குடிமக்கள் தங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைத் செயலிழக்க அல்லது கண்டுபிடிக்க அனுமதிக்கிறது.

பயனர்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்ட மொபைல் இணைப்பை அறிந்து கொள்ளவும்,  மற்றும் புதிய அல்லது பழைய மொபைல் ஃபோனை வாங்கும் போது சாதனங்களின் உண்மையான தன்மையை சரிபார்க்கவும் இந்த பயன்பாடு அனுமதிக்கிறது.

இந்த இணையதளத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சார் சாதி என்பது தொலைத்தொடர்புத் துறையின் (DoT) ஒருங்கிணைந்த குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இது நாட்டில் மொபைல் பயனர்கள் அல்லது சந்தாதாரர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த போர்டல் நாடு தழுவிய பயன்பாட்டிற்காக  தொலைத்தொடர்பு அமைச்சர் அஷிவினின் வைஷன்வ் மே 16  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

பாதுகாப்பு போர்ட்டலில் CEIR மற்றும் TAFCOP போன்ற பல்வேறு குடிமக்களை மையப்படுத்திய தொகுதிகள் உள்ளன. CEIR தொகுதி பயனர்கள் திருடப்பட்ட சாதனங்களைத் தடுக்க அல்லது கண்காணிக்க சஞ்சார் சாத்தியை செயல்படுத்துகிறது. TAFCOP பயனர்களை மொபைல் இணைப்பு எண்களைச் சரிபார்த்து துண்டிக்க அனுமதிக்கிறது.

சஞ்சார் சாதியை எவ்வாறு பயன்படுத்துவது:

பயனர்கள் தங்கள் திருடப்பட்ட தொலைபேசிகளைக் கண்காணிக்க முடியும் அல்லது ஏதேனும் புதிய சிம் செருகப்பட்டால் அவற்றைத் தடுக்கவும் வழிவகை செய்கிறது. ஆனால் அவர்கள் முதலில் போர்ட்டலில் போலீஸ் புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.

முதலில், சஞ்சார் சாத்தி போர்ட்டலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.  பின்னர் மொபைல் போன்கள், IMEI, மொபைல் பிராண்ட் மற்றும்  பொமபைல் பில் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.

பின்னர் ‘இழந்த தகவல்’ ( ‘lost information) என்பதைக் கிளிக் செய்யவும். இதில் உங்கள் சாதனத்தை தொலைத்த இடம் மற்றும் தேதி மற்றும் போலீஸ் புகார் எண் ஆகியவை அடங்கும். பின்னர் OTP ஐ உள்ளிட்டு பயன்பாட்டைச் சரிபார்க்கவும். பின்னர் இது 24 மணிநேரத்தில் திருடப்பட்ட அல்லது தொலைந்து போன மொபைல் செயல்பாட்டை தடுக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.