லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் வெளியானது!

நடிகர் கமல்ஹாசன் வரிகளில் ஸ்ருதிஹாசன் இசையமைப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள  ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம்…

நடிகர் கமல்ஹாசன் வரிகளில் ஸ்ருதிஹாசன் இசையமைப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள  ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் வெளியானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார்.  ரஜினி – 171 படமாக இது உருவாக உள்ளது.  இதற்கான திரைக்கதை வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.  இதற்கிடையே கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும்,  ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்  வெளியிட்டது.

அதில்,  ‘இனிமேல் டெலுலு இஸ் தி நியூ சொலுலு’ என்று கேப்ஷன் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான அர்த்தம் விளங்காமல் ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர்.  இசையின் மேல் ஆர்வம் கொண்ட ஸ்ருதி ஹாசன் எட்ஜ்,  ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற இண்டிபெண்டெண்ட் ஆல்பங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்.  அந்த வரிசையில் அவர் லோகேஷ் கனகராஜை வைத்து ‘இனிமேல்’ என்ற ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார்.  அந்த பாடலுக்கான வரிகளை கமல் ஹாசன் எழுதியுள்ளார்.

 

இதில் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்துள்ளார்.  துவர்கேஷ் இந்த இசை ஆல்பத்தின் வீடியோவை இயக்கியுள்ளார்.  இந்த பாடலில் டீசர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில், பாடலின் முழு விடியோவைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.