Skip to content
May 16, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » logo color change issue doordarshan explained
முக்கியச் செய்திகள் இந்தியா

லோகோ நிறம் மாற்றப்பட்ட விவகாரம் – தூர்தர்ஷன் விளக்கம்!

தூர்தர்ஷன் சேனலின் லோகோ நிறம் மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில்…

Author Avatar

Web Editor

April 21, 20245:23 pm BJPDoordharshanIndialogo

தூர்தர்ஷன் சேனலின் லோகோ நிறம் மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை தொடர்ச்சியாக தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்சர்சனின் இலச்சினை காலங்காலமாக இருந்து வந்த சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாற்றப்பட்டது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டிடி செய்திகள் ஏப். 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சிகள் இதற்கு தங்களது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;

தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

முன்னதாக கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இந்த நடவடிக்கை தார்மீகமற்றது, சட்டவிரோதமானது. இதன்மூலம், தேசிய அளவிலான பொது ஒளிபரப்பு நிறுவனம் (தூர்தர்ஷன்), பாஜகவுக்கு ஆதரவானதாக ஒருதலைபட்சமாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிலையில், இதற்கு தூர்சர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கெளரவ் திவேதி பேசுகையில், “தூர்தர்ஷனின் லோகோவின் நிறத்தை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது.  தூர்சர்சனின் இலச்சியினையின் வண்ணம் காவியல்ல, ஆரஞ்ச் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று விளக்கமளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor May 16, 2026

தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?

By Web Editor May 16, 2026

“வெளிநாட்டு பயணங்களுக்கு வரி விதிக்க போவதாக வெளியான தகவல் பொய்யானது” – பிரதமர் நரேந்திர மோடி!

By Web Editor May 16, 2026

நாளை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

By Web Editor May 16, 2026
#ट्रेंडिंग हैशटैग:BJPDoordharshanIndialogo

Post navigation

Previous Previous post: “சேட்டை பிடிச்ச பையன் சார்….” – ஈடன்கார்டன் மைதானத்தில் ப்ராங் செய்த விராட் கோலி!
Next Next post: மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading