தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜன.25ஆம் தேதி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மீண்டும் 19 மாவட்ட பொறுப்பாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை தவெக வெளியிட்டுள்ளது. இன்றும் நிர்வாகிகளுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.