‘நான் கொஞ்சம் மூச்சு விடனும்’ எதிர்காலம் குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன் என பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.
விடுதலைக்கு பிறகு பேரறிவாளன், முதல்முறையாக செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்’ என்ற திருக்குறளைக் மேற்கோள் காட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், அடிப்படையில் பல பேர் என் மீது அன்பு செலுத்தி, தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், இவ்வளவு போராட்டத்திற்கும் தனது தாய் தான் காரணம் என நெகிழ்ச்சிபட தெரிவித்த அவர், 31 ஆண்டுகாலம் இடைவிடாது போராடி இருப்பதாக குறிப்பிட்டார்.
https://twitter.com/news7tamil/status/1526820347714015232
ஒவ்வொரு காலகட்டத்தையும் நான் ஒப்பிட்டு வாழ்ந்தேன் என தெரிவித்த அவர், என் தாயின் வலிக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாக இதை பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், தனது குடும்பம் தனக்கு முழு ஆதரவு அளித்து, அன்போடு, தன்னை ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, என் அம்மாவின் பாதி வாழ்க்கை எனக்காகவே மாறிவிட்டது எனக்கூறிய பேரறிவாளன், எதாவது ஒரு வகையில் பலரும் தங்களது சக்திக்கு மீறி எனக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டு பேசினார்.
அண்மைச் செய்தி: ‘பேரறிவாளன் விடுதலை; நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல் நொடிகள்’
மேலும், மக்களின் ஆதரவும், தனது தங்கை செங்கொடியின் தியாகமும்தான் இவ்வளவு நாள் தனக்கு ஊக்கத்தை கொடுத்ததாக தெரிவித்தார். அதேபோல, தியாகராஜன் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல அதிகாரிகள் உண்மையை வெளிபடுத்தி தனக்கு ஆதரவு அளித்தார்கள் என உருக்கமாக தெரிவித்தார்.
இந்த விடுதலை சாத்தியபடுத்துவற்காக பல ஆண்டுகளாக, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்காக பல வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்தார்கள் ஆவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்த பேரறிவாளன், அரசும் தனக்கு முழு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டார். அப்போது, ஊடகம் இல்லையென்றால் இந்த உண்மை வெளியே வந்திருக்காது குறிப்பிட்ட அவர், கொஞ்சம் காலம் காற்றை சுவாசிக்கனும், ‘நான் கொஞ்சம் மூச்சு விடனும்’ எதிர்காலம் குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன் என பேரறிவாளன் அப்போது தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









