”பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும்” – அண்ணாமலை

பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த  நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த  நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார். மேலும் பாஜகவில் இருந்து பிரிந்த நிர்மல் குமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இன்று இணைந்தார்.

இந்நிலையில் கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்தி : 16 மீனவர்கள் கைது – நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது அப்போதுதான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க இயலும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.