லியோ டிரெய்லர் 16 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’. திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியாகியது. டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆக்ஷன் விருந்தை இந்த டிரைலர் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியான 5 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்த நிலையில், 3 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்நிலையில் டிரெய்லர் 16 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
It's blazing 30M+ real-time views for #LeoTrailer
▶️ https://t.co/KqDll4jyl6#Thalapathy @actorvijay @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leo pic.twitter.com/83CZn68gQL
— Sun TV (@SunTV) October 6, 2023