#LegendSaravanan நடிக்கும் 2-வது படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடக்கம்!

‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் 2வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை…

Legend New Saravana Stores Productions, New Movie ,Legend Saravanan, cinema updates,

லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் 2வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது 2-வது படத்தை அவர் தொடங்கினார். தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘காக்கி சட்டை’, ‘கொடி’, உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநருமான ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, ‘பாகுபலி’ பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ‘லியோ’ புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.

இதையும் படியுங்கள் : #OneNationOneElection – விரைவில் அமல்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அரசு!

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது பூஜையுடன் தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது. இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.