அரிக்கொம்மன் யானையின் லேட்டஸ்ட் அப்டேட்… குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த வனத்துறை…

அரிக்கொம்மன் யானை குறித்த குழப்பங்களை களைய வனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த வாரம் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.…

அரிக்கொம்மன் யானை குறித்த குழப்பங்களை களைய வனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த வாரம் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக அகத்தியர் மலை கோதையாறு பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

தற்போது களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிகொம்பன் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சின்ன பிள்ளைபோல் புல்வெளியில் உறங்கும் அரிகொம்பன் யானை என ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகு பகிர்ந்திருந்தார். இதனை கேரள ஊடகங்கள் அரிகொம்பன் யானை புல்வெளியில் அயர்ந்து தூங்குவதாக வீடியோ வெளியிட்டன.  அதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இதனையடுத்து  ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகு பகிர்ந்த தவறான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் தனது பதிவை நீக்கினார்.  இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி அரிக்கொம்மன் பற்றிய தற்போதைய நிலை குறித்து வனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,  “தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பிடிக்கப்பட்ட அரிக்கொம்மன்
யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட மேல் கோதையாரில் உள்ள குட்டியார் அணைப்பகுதியில் விடப்பட்டது. அரிக்கொம்பன் யானையானது தற்பொழுது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் எடுத்துக் கொள்கிறது.

யானையின் நடமாட்டத்தினை களக்காடு, அம்பாசமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி வனக்கோட்ட பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். ஜீன் 6ம் தேதி முதல் வன உயர் அதிகாரிகள், கால்நடை மருத்துவக்குழு. முன் களப் பணியாளர்கள் உள்ளடக்கிய மொத்தம் 6 குழுக்கள் அரிக்கொம்மன் கழுத்தில் பொறுத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தொழில்நுட்பம் மூலம் யானையின் நடமாட்டம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வனத்துறை சார்பாக யானைக்கும், பொது மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளது” என அரிக்கொம்மன் பற்றிய தற்போதைய நிலை குறித்து வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.