இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதிலும் மக்கள் போராட்டம்!

உலகம் முழுவதிலும் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல்…

உலகம் முழுவதிலும் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனிடயே, போரினால் பாதிக்கப்பட்டு பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெற்று வந்த காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவமனை தாக்குதல் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்  என உறுதியளித்துள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உடனடி போர் நிறுத்தம் கோரி உலக நாடுகள் பலவற்றில் மக்கள் போராடி வருகின்றனர். லண்டன் தெருக்களில் குறைந்தது 1,00,000 பேராவது பாலஸ்தீன கொடியை ஏந்தி காஸாவில் குண்டு வீசுவதை நிறுத்தச் சொல்லி கோஷமிட்டுள்ளனர்.
வடக்கு அயர்லாந்தின் முக்கிய நகரமான லண்டன்பெர்ரியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அயர்லாந்து குடியரசின் எல்லையில் டப்ளின் நகரம் நோக்கி ஆயிரக்கணக்கானோர், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி பேரணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் தெருக்களில் குறைந்தது 1,00,000 பேராவது பாலஸ்தீன கொடியை ஏந்தி காஸாவில் குண்டு வீசுவதை நிறுத்தச் சொல்லி கோஷமிட்டுள்ளனர். வடக்கு அயர்லாந்தின் முக்கிய நகரமான லண்டன்பெர்ரியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அயர்லாந்து குடியரசின் எல்லையில் டப்ளின் நகரம் நோக்கி ஆயிரக்கணக்கானோர், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி பேரணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.