“குடும்பஸ்தன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

மணிகண்டன் நடித்துள்ள “குடும்பஸ்தன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம்’ என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி வெளியான திரைப்படம் ‘குடும்பஸ்தன்’ .

இப்படத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். இதில் மணிகண்டன் உடன் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வைசாக் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு சுஜித் என்.சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 28ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.