கொட்டுக்காளி படக்குழு எனது இன்னொரு குடும்பம் – #AnnaBen இன்ஸ்டாகிராமில் பதிவு!

கொட்டுக்காளி படக்குழு எனது இன்னொரு குடும்பம் என அப்படத்தின் நடித்த நடிகை அன்னாபென் நடித்துள்ளார். கூழாங்கல் திரைப்பட இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது கொட்டுக்காளி திரைப்படம். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.…

Kotukkali Film Crew My Another Family - #AnnaBen Post on Instagram!

கொட்டுக்காளி படக்குழு எனது இன்னொரு குடும்பம் என அப்படத்தின் நடித்த நடிகை அன்னாபென் நடித்துள்ளார்.

கூழாங்கல் திரைப்பட இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது கொட்டுக்காளி திரைப்படம். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் சூரி மற்றும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திக் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது..

“ இன்றுமுதல் கொட்டுக்காளி உங்களுடையது. இந்தச் சிறப்பான படம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். 2 மணி நேரத்தில் நீங்கள் திரையில் பார்க்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்ந்திருப்பார்கள். இந்தப் படத்தின் மூலம் நாங்கள் உங்களை எங்களுடன் கலையின் மூலம் தொடர்புப்படுத்துவோமென நம்புகிறோம்.

இந்தப் படத்தின் உண்மை உங்களது இதயத்தை சென்றடையும் என்றும் நம்புகிறேன். இந்தப் படத்தில் என்னை நடிக்கவைத்த கடவுளுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். என்னுள் மீனா கதாபாத்திரத்தினை இருக்குமென நம்பி வாய்ப்பு தந்தமைக்கு இயக்குநர் பி.எஸ்வினோத் ராஜுக்கு மிகுந்த அன்பும் நன்றியும். உங்களுடன் வேலை செய்தது ஒரு கனவு போலிருக்கிறது. நான் மீனா கதாபாத்திரத்தை புரிந்துகொள்வதற்கும் என்னை நானே வெளிப்படுத்த நீங்கள் கொடுத்த இடமும் என்னுடன் பொறுமையாக பயணித்தமைக்கும் நன்றி.

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இல்லாவிட்டால் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியாது. எல்லைகளை தாண்டி செல்ல மிகப்பெரிய தூணாக இருந்தீர்கள் சிவகார்த்திகேயன் சார்.

டியர் சூரி, நீங்கள் ஒரு புதிய கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளீர்கள். உங்களது சினிமா வாழ்க்கையில் இதுவொரு சிறப்பு மகுடமாக இருக்கும். இதைக்காணும் முதல் நபராக நான் இருக்கிறேன். மீனா காதாபாத்திரம் பாண்டியிடமிருந்து ஆற்றல்களை பெற்றுகொண்டாள். என்னுடன் நடித்ததிலேயே சிறந்த துணை நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள். இந்தப் படத்தில் என்னுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மற்றவர்கள், பெரிய நோக்கத்துக்காக நடித்துள்ளார்கள்.

உங்களுடன் நேரம் செலவிட்டது எப்போதும் நினைத்து பெருமை கொள்ளும் ஒன்று. ஒளிப்பதிவாளரின் கடின உழைப்பு என்னை வியக்க வைத்தது. எனது குடும்பத்தைத் தாண்டி வெளியே இருக்கும் குடும்பமாகவே இந்தப் படக்குழுவினரைப் பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும்  எனது குடும்பத்தைத் தாண்டி வெளியே இருக்கும் குடும்பமாகவே இந்தப் படக்குழுவினரைப் பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.