கேரளாவில் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு கட்சிக்கு பேரிழப்பு என்று நினைவேந்தல் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதபடியே கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மூத்த நிர்வாகியுமான கொடியேரி பாலகிருஷ்ணன் புற்றுநோயால் பதிப்பட்டு கடந்த 1
ம் தேதி இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேற்றைய தினம் கண்ணூர் பையம்பலம்
பகுதியில் வைத்து இறுதி சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து கட்சி சார்பில்
நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றன. 
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கொண்ட முதல்வர் பினராய் அவரது மறைவு கட்சிக்கு பேரிழப்பு, என்றும் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய ஒரு நல்ல தலைவரை
இழந்தோம் எனவும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து பேச முடியாத நிலையில் முடிக்கிறேன் என கூறி விட்டு சென்றார். முன்னதாக அவரின் உடலை முதல்வர் பினராயி விஜயன் சுமந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தொழில் முதலீடுகளை ஈர்க்க கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் ராஜு, அப்துல் ரகுமான் ஆகியோர் 13 நாட்கள் சுற்றுபயணமாக வெளிநாடு புறப்பட்டு சென்றனர். அதிகாலை கொச்சியில் இருந்து புறப்பட்டனர்.
இன்று அதிகாலையில் கொச்சி நெடும்பசேரி விமான நிலையத்தில் இருந்து முதலில் நார்வே செல்கின்றனர். அங்கிருந்து இங்கிலாந்து உட்பட பல நாடுகளுக்கு செல்கின்றனர்.
முன்னதாக இந்த திட்டம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி திட்டமிடப்பட்டது. ஆனால் கொடியேரி பாலகிருஷ்ண் இறந்ததால் திட்டம் மாற்றி வைக்கப்பட்டன, தொடர்ந்து 13ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.







