கேரளா: பல்கலைகழக இசை நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி

கேரளாவில் தொழில் நுட்ப பல்கலைகழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.  எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (குசாட்) டெக் ஃபெஸ்ட் (Tech…

கேரளாவில் தொழில் நுட்ப பல்கலைகழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (குசாட்) டெக் ஃபெஸ்ட் (Tech Fest) நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாக பின்னணி பாடகி நிகிதா காந்தி பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது  திடீரென பெய்த மழை பெய்துள்ளது.

இதனால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அருகிலுள்ள பகுதிக்கு விரைந்து ஓடியுள்ளனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் கீழே விழுந்துள்ளனர்.  இந்த எதிர்பாராத சம்பவத்தால் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு களமசேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.