ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட கடவுள் உருவங்களை அச்சிடவேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க இந்தோனேசியா ரூபாய் நோட்டில் விநாயகர் படம் அச்சிடுவது போல், இந்திய ரூபாய் நோட்டின் மற்றொரு பக்கத்தில் லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட கடவுள் உருவாங்களை அச்சிடவேண்டும் என்றும், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரூபா ய் நோட்டுகளில் கடவுள் உருவபடங்கள் அச்சிடப்படவேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்தீப் தீட்சித் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ”பி” டீமை சேர்ந்தவர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது என்றார். அவர் வாக்கு அரசியலுக்காக தன்னை ஒரு பாகிஸ்தானியர் என சொல்ல கூட தயங்கமாட்டார் என்றும் சாடினார்.
இந்நிலையில் பாஜக செய்தி தொடர்பாளரான சம்பித் பத்ரா இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், அயோத்தி ராமர் கோயிலில் செய்யப்படும் பிராத்தனைகளை கடவுள் ஏற்க மாட்டார் எனக் கூறி, அங்கு செல்ல மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால்தான் தற்போது அரசியலில் U TURN எடுக்கிறார் என விமர்சித்துள்ளார்.







