NDA கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்

டெல்லியில் ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக கூட்டணியை அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதாவது ஜேடிஎஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. இதற்கிடையில், காங்கிரஸ், பாஜக…

டெல்லியில் ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக கூட்டணியை அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதாவது ஜேடிஎஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. இதற்கிடையில், காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் ஆகிய மூன்று கட்சிகளும் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளன. இங்கு காங்கிரசை தோற்கடிக்க பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் சிறப்பான வியூகம் வகுத்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இரு கட்சிகளும் ஒன்று சேர முடிவு செய்துள்ளன. இன்று (செப்டம்பர் 22) டெல்லியில் ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக கூட்டணியை அறிவித்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான எச்டி குமாரசாமி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா , பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார் . இந்த சந்திப்புக்குப் பிறகு, நட்டா எக்ஸ் (ட்விட்டர்) இல் கூட்டணியை அறிவித்தார். நட்டா, அமித் ஷா மற்றும் குமாரசாமியுடன் இருக்கும் புகைப்படத்தை X இல் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில் “ஜேடிஎஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க முடிவு செய்துள்ளது. தங்களின் முடிவில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜேடிஎஸ் கட்சியை என்டிஏவுக்கு மனதார வரவேற்கிறோம். இந்த கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும், மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா, வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்க உதவும் ” என்று நட்டா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.