‘கண்ணே கலைமானே’… காலம் கடந்தும் கலங்கடிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்…!

கண்ணே கலைமானே பாடல் வெளியாகி 42 ஆண்டுகள் ஆன நிலையிலும், அனைத்து வயதினராலும் ரசிக்கபட்டு வருகிறது.  தமிழ் திரை உலகில் கமல்ஹாசன்,  ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் பல சிறப்புகளை பெற்றது.  நடிப்பில்…

கண்ணே கலைமானே பாடல் வெளியாகி 42 ஆண்டுகள் ஆன நிலையிலும், அனைத்து வயதினராலும் ரசிக்கபட்டு வருகிறது. 

தமிழ் திரை உலகில் கமல்ஹாசன்,  ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் பல சிறப்புகளை பெற்றது.  நடிப்பில் இருவருக்கும் நடந்த போட்டியை அழகாக சித்தரித்த படம், கண்ணதாசனின் கடைசி கவித்துவமான வரிகளால் எழுதப்பட்ட பாடல் வெளியான படம், கமலுக்கும்,  பாலுமகேந்திராவுக்கும் விருது பெற்றுத் தந்த படம் என பல சிறப்புகளைக் கொண்ட படம் “மூன்றாம் பிறை” திரைப்படத்தில் இடம் பெற்று உள்ள ‘கண்ணே கலைமானே ‘பாடல் வெளியாகி 42 ஆண்டுகள் ஆனது.

இந்நிலையில் இன்று மலர்ந்த மலர் போல  அந்தப் பாடல் இளைஞர்கள் முதல் முதியவர் வரை அனைவரின் உள்ளங்களில் இருந்து வெளிவருவதைப் பார்ப்பது பரவசமாக உள்ளது.

இதையும் படியுங்கள் : ஓசூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

‘கண்ணே கலைமானே’ கண்ணதாசனின் கடைசி பாடல்,  இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம்,  பல பாடல்களை பல கவிஞர்கள் எழுதினாலும் கண்ணதாசனின் வைர வரிகளுக்கு எப்போதும் பொதுமக்களிடையே  மவுசு உண்டு.  அப்படி எழுதிய பாடல்தான் ‘கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டே உனை நானே’ பாடல்.  அதை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லும் முன் எழுதிக் கொடுத்துவிட்டு இதுதான் கடைசி பாடல்னு நினைக்கிறேன் என்று கூறிச் சென்ற கவிஞர் அதன்பின் உயிரற்ற உடலாகத்தான் கொண்டுவரப்பட்டார்.  அப்பாடல் எப்போதும் சிறப்பு பெற்ற பாடலாக திகழ்கிறது.

அந்த வகையில்,  கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளான ‘கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டே உனை நானே’ பாடல் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பொது மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.  கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இன்று மலர்ந்த மலர் போல அந்தப் பாடலை இளைஞர்கள் முதல் முதியவர் வரை  சேர்ந்து பாடினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.