‘கமல் குருதிக்கொடை குழு’ என்ற அமைப்பை மக்கள் நீதி மய்யம் உருவாக்கியுள்ளது.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கான ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகுவதாகவும், நற்பணி நாயகர்கள் தொடர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற உயிர்களைக் காத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1536934793551966208?t=JRVKvNkKyaxhpgTCY7L9xQ&s=08
மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களைத் தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ‘Kamal’s Blood Commune’ உருவாக்கியுள்ளோம் எனக் கூறியுள்ள கமல்ஹாசன், இதன் மூலம் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘ஒற்றைத்தலைமை விவகாரம்; ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்’
9150208889 எனும் பிரத்தியேக எண்ணுக்கு அழைத்தால், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுபவருக்குத் துரிதமாக உதவ முடியும். ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களும் இந்த எண்ணை அழைத்து தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ள அவர், ரத்த தானம் செய்வதற்குரிய உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் இந்த அரும்பணியில் தங்களை இணைத்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குருதிக்கொடையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழுவைத் தொடங்கி ரத்ததானம் செய்வது பாராட்டுக்குரிய முன்னோடி முயற்சி. இதனை முன்னெடுத்த மக்கள் நீதி மய்யத்தினரை மனதாரப் பாராட்டுவதாக அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








