“கல்யாணம் இல்ல… படம்…” | புதிய படத்தில் ஜோடியாக நடிக்கும் வனிதா – ராபர்ட்!

வனிதா விஜய்குமார் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார் சின்னத்திரை, வெள்ளித்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

வனிதா விஜய்குமார் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் சின்னத்திரை, வெள்ளித்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார். இதற்கிடையே, அவருக்கும் பீட்டர்பால் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணமானது. ஆனால், சில நாள்களிலேயே இருவரும் பிரிந்ததுடன், பீட்டர் திடீர் மரணமடைந்தார். தொடர்ந்து, தன் குழந்தைகளுடன் தனியாகவே இருப்பதாக வனிதா தெரிவித்தார்.

பின்னர் நடிகர் பவர் ஸ்டாருடன் வனிதா இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. உடனே அவருக்கும், வனிதாவிற்கும் கல்யாணமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். பின்னர் அது ஒரு படம் என தெரியவந்தது. இந்நிலையில் மீண்டும் வனிதாவிற்கு கல்யாணமா? என இணையத்தில் கேள்வி எழுந்துள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு போஸ்டர் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் இருக்கும் போஸ்ட்டரை பார்த்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என செய்தி பரவியது. இந்நிலையில் தாங்கள் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்காக இப்படி செய்துள்ளனர் என்பது தற்போது வனிதா வெளியிட்டு இருக்கும் வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது.

வனிதா இயக்கத்தில் வனிதா மற்றும் ராபர்ட் ஜோடியாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தை வனிதா மகள் ஜோவிகா தயாரிக்கிறார். அந்த படத்தின் புரோமோவை வனிதா வெளியிட்டு இருக்கிறார். இந்த படத்திற்கு Mrs & Mr என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் 4வது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.