கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கைது செய்ய 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரிடம் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவின் பேரில் ஒரு நாள் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 5 பேரையும் ஜாமினில் விடுவிக்ககோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யபட்டு கடந்த 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் நகலை கொண்டு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் அந்த மனுவை ஏற்க முடியாது எனவும் வழக்கு சிபிசிஐடி வசம் வழக்கு சென்றுவிட்டதால் சிபிசிஐடி பதிவு செய்த எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமின் மனு தாக்கல் செய்யுமாறும் ஜாமின் மனு தொடர்பாக சிபிசிஐடி விளக்கம் அளிக்கவும் விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் பள்ளி தரப்பினர் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்த எப்ஐஆர்ஐ சனிக்கிழமை பள்ளியின் தரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதியின் அம்மா செல்வி தரப்பில் ஜாமீன் வழங்க கூடாது என இன்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் மனுவையும் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தோடு, வழக்கு தொடர்பாக கைது செய்த 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.







