ஜில் ஜில் கூல் கூல்… தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை; மக்கள் மகிழ்ச்சி!

நேற்று இரவு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் தியாகராயர் நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், வடபழனி, சூளைமேடு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. கும்பகோணம் மற்றும்…

நேற்று இரவு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் தியாகராயர் நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், வடபழனி, சூளைமேடு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வைத்தீஸ்வரன் கோயில், சட்டநாதபுரம், கொள்ளிடம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இடியுடன் கூடிய மழையால் குளுமையான சூழல் நிலவியது.

அதேபோல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.