நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு – 768 வாகனங்கள் பறிமுதல்.!

மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவம் அதிகரித்ததன் எதிரொலியாக 768 வாகனங்களை பறிமுதல் செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மாநகரில் பைக்குகளில் நம்பர் பிளேட் இல்லாமலும்,…

மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவம்
அதிகரித்ததன் எதிரொலியாக 768 வாகனங்களை பறிமுதல் செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை மாநகரில் பைக்குகளில் நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் தெளிவாக தெரியாத
வகையில் மாற்றியமைத்தும் செல்போன் பறிப்பு மற்றும் நகை பறிப்பில் ஈடுபடுவது,
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது காவல்துறையின் CCTV மற்றும் ANPR
கேமராக்களில் சிக்காமல் தப்புவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் மதுரை மாநகரில் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்களில் சிறப்பு வாகன தணிக்கை
நடத்தப்பட்டது. இதில் நம்பர் பிளேட் இல்லாத 17 பைக்குகள் பறிமுதல்
செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் நம்பர்கள் தெளிவாக தெரியாதவாறு நம்பர் பிளேட் அமைத்து இயக்கிய
751-வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பைக்குகள் பறிமுதல்
செய்யப்பட்டு,பிளேட்கள் மாற்றியமைக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டது.

தொடர்ந்து நம்பர் பிளேட் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல்
செய்யப்படுவதோடு அதன் ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
மாநகர காவல் ஆணையர் லோகநான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள்
உரிய சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.