கேரளாவில் தண்டவாளத்தில் வந்த ஜேசிபி வாகனம்- வீடியோ வைரல்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் தண்டவாளம் வழியாக வந்த ஜேசிபி வாகனத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஓட்டப்பாலம் ரயில் நிலையம் உள்ளது.  இத் தண்டவாளம் வழியாக ஜேசிபி…

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் தண்டவாளம் வழியாக வந்த ஜேசிபி
வாகனத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஓட்டப்பாலம் ரயில் நிலையம் உள்ளது.  இத் தண்டவாளம் வழியாக ஜேசிபி வாகனம் வந்துள்ளது. தண்டவாளத்தில் ஜேசிபி வாகனம் வருவதை பார்த்து மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

பின் ஜேசிபி வாகனம் ரயில் பாதையை சீரமைப்பதற்காக வரவழைக்கப்பட்டது என தெரிய வந்தது.  ஓட்டுநர் தெரியாமல் ஒரு தண்டவாளம் வழியாக வரவே அந்த வழியாக ரயில் வருவதாக அதிகாரிகள் நிறுத்தி எச்சரித்ததை தொடர்ந்து,  மற்றொரு தண்டவாளம் வழியாக வேகமாக எடுத்து சென்றார்.ஓட்டுநரின் திறமையை பாராட்டி வரும் மக்கள் இந்த காட்சியை வைரல் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.