ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படத்தின் டிரைலர் 2 நிமிடம் 33 வினாடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்தக்கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இப்படம், நான்கு மொழிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.
#Iraivan will surprise you with the incredible theatrical experience across 4 languages from August 25th !!!#IraivanFromAug25#Nayanthara @Ahmed_filmmaker @thisisysr @PassionStudios_ #HariKVedanth @eforeditor @jacki_art @Synccinema @MangoPostIndia @gopiprasannaa @Shiyamjack… pic.twitter.com/8wemronajr
— Jayam Ravi (@actor_jayamravi) June 7, 2023
இந்த வெற்றி கூட்டணியில் வெளியாகவுள்ள இப்படம் ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் 2 நிமிடம் 33 வினாடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







