நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்பட முன்னோட்டத்தை 11.2 கோடி பேர் பார்த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, விஜய்சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கோலிவுட்டிலிருந்து பல இயக்குநர்கள் பாலிவுட்டிற்கு சென்று வெற்றி வாகை சூடியுள்ளனர்.
அந்த வகையில் அட்லீ, நயன்தாரா, அனிருத், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோருக்கு இது முதல் பாலிவுட் படம். ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.இந்த படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியானது. இதனை சுமார் 11.2 கோடி பேர் பார்த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுதொடர்பான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.






