ஜவான் டிக்கெட் முன்பதிவு: முதல் நாளில் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

ஜவான் படம் ரிலீசாகும் முதல் நாளில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு…

ஜவான் படம் ரிலீசாகும் முதல் நாளில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் 7ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்று சாதனை படைத்துள்ளது.

பிவிஆர் திரையரங்கில் (PVR) 1,12,299, ஐநாக்ஸ் (INOX) 75,661, சினிபோலிஸ் (CINEPOLIS) – 40,577 என மொத்தம் 2,28,538 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. சுமார் ₹9.01 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது.

டெல்லியில் 39,535 ( ₹1.91 கோடி), மும்பை- 39,600 ( ₹1.57 கோடி), பெங்களூரூ 39,325 ( ₹1.42 கோடி), ஹைதராபாத்- 58,898 ( ₹1.35 கோடி), கொல்கத்தா 40,035 ( ₹1.16 கோடி ). என இந்தியா முழுவதும் 5,17,700, (₹14.47 கோடி) விற்பனை ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.