இன்னும் இரண்டு நாட்களில் துபாய் புர்ஜ் கலிஃபாவில் வெளியாகும் ”ஜவான்” டிரைலர் – அனல்பறக்கும் அப்டேட்..!

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் அட்லி இயக்கிய ஜவான் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் ஷாருக்கான் அறிவித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று…

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் அட்லி இயக்கிய ஜவான் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.

தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.

ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் ரூ.250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அண்மையில் ரூ.15 கோடி செலவில் ஷாருக்கான் அறிமுகமாகும் ‘வந்த இடம்’ என்ற பாடல் வெளியாகி வைரலானது..

ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. ஜவான் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அப்படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த மாஸான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

https://twitter.com/iamsrk/status/1696164134692307298

அதன்படி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஜவான் படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிரைலரை உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தான் இந்த டிரைலர் வெளியாக உள்ளதாக படத்தின் கதாநாயகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இதனால் அப்படத்தின் டிரைலர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.