‘தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி’ – அமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி பயிற்றுவிக்கப்படவுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை ஜப்பான் தூதரக அதிகாரிகள் சந்தித்தனர். சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய…

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி பயிற்றுவிக்கப்படவுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை ஜப்பான் தூதரக அதிகாரிகள் சந்தித்தனர். சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் sandwich course இந்த ஆண்டு சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி & தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வேலூரில் 3.5 ஆண்டு சாண்ட்விச் கோர்ஸ் தொடங்கப்படும் எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘இபிஎஸ் மேல்முறையீட்டு மனு; 4 வாரங்களில் பதிலளிக்க ராம்குமார், சுரேனுக்கு உத்தரவு’

தொடர்ந்து பேசிய அவர், உயர் கல்வித்துறை – மேன்டோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது எனவும், 7 செமஸ்டர்களில் 2 செமஸ்டர்களில் மேன்டோ நிறுவனத்தில் பயிற்சி பெறுவர் எனக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி பயிற்றுவிக்க ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக ஜப்பான் தூதரக அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.