நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ”ஜெயிலர்” திரைப்படத்தின் ஷோகேஸ், படம் வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னால் வெளியாகி உள்ளது. இந்த ஷோகேஸ் வீடியோவில் பல படங்களின் கலவை என நமக்கு தெரிகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பீஸ்ட் திரைப்பட கிளைமாக்ஸ் இல் ஷூட் செய்து உபயோகப்படுத்தாத RAW FOOTAGEஐ இந்த ட்ரெய்லரின் முதல் ஃபிரேமில் காண்பித்துள்ளனர். விஜய் படத்தின் முன்னாள் இயக்குநர் என்ற முறையில், அஜித்தின் விவேகம் பட Sceneஐ போலவே பிரேம் செட் செய்துள்ளார் நெல்சன். அங்கு ரோட்டில் செல்லும் ஐந்து வாகனங்களை குறி வைக்கும் போலீசார், வில்லனின் தலைவன் யாரையோ கூட்டி செல்வதால் அவர்களைக் குறித்து போலீசார் சுட்டுத் தள்ளுகின்றனர். அடுத்த ஃப்ரேமில் சிபிஐயில் இருந்து வருகிறோம் என அதிகாரிகள் கூறுகையில், தெலுங்கு நடிகர் ஏதாவது DONATION வேண்டுமா என கேட்பது சமீபத்திய அரசியல்வாதியை குறிப்பிடுவது போலவே உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்ததாக விடிவி கணேஷ் ரஜினிக்கு ஏதோ கிளாஸ் எடுப்பது போல தெரிகிறது. இது ”நான் சிரித்தால் ஹிப் ஹாப் தமிழா போலவும்”, பீஸ்ட் பட சீன்களையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.
அடுத்த பிரேமில் ஷூ துடைக்கும் ரஜினி கழுத்தில் ஒரு செயின் உள்ளது. அதில் போல்ட் ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது அதுவும் மற்றொரு FRAMEல் மெக்கானிக் செட்டில் மாஸாக காரிலிருந்து இறங்கும் ரஜினி என இந்த இரு காட்சிகளையும் ஒப்பிட்டு பார்க்கையில், அவர் ஒரு PART TIME மெக்கானிக்காக கூட இருக்கலாம் எனும் சந்தேகம் நமக்கு வருகிறது. அதே சீனில் புதினா சட்னி இல்லையா என ரம்யா கிருஷ்ணனிடம் கேட்கும் ரஜினி சீனை பார்த்தால் பா பாண்டி படத்தில் ராஜ்கிரண் வசனம் கேட்பது போலவே இருக்கிறது. மேற்கு மாம்பலத்தில் இல்லாத கடையை கொண்டு வந்து வைத்து இதுதான் வெஸ்ட் மாம்பலம் என நம்ப வைக்கிறார் நெல்சன்.
திடீரென புலியாக மாறுவார் என விடிவி கணேஷ் கூறி அதில் தொடங்கும் காட்சிகள் லியோ திரைப்பட விஜய் போலவே இருக்கிறது. பகலில் காய்கறி வாங்கும் ரஜினியாகவும் இரவில் வில்லன்களின் கையை வெட்டும் Cop ஆகவும் இருப்பதாக தெரிகிறது. ரஜினி ரசிகர்களுக்கு அவரது டைட்டில் கார்டு ஒரு வெறியை கொடுக்கும். எந்திரன் 2.0 திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. அதேபோல இந்த படமும் ஆகி விடக்கூடாது என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். பின்னர் மலையாள நடிகர் ஒருவர் வில்லனை கீழே படுக்க வைத்து சுத்தியலால் அடிக்கிறார். இதை பார்க்கும் பொழுது பிகில் படத்தில் ராயப்பன் கழிவறையில் வில்லனை வைத்து அடிப்பது போலவே இருக்கிறது. அடுத்ததாக ரஜினி பழிவாங்க அவரின் பேரனை வெட்ட அரிவாள் எடுத்து வரும் காட்சியை பார்க்கும் பொழுது, சுப்ரமணியபுரம் கலந்த விக்ரம் படமே நமது ஞாபகத்துக்கு வருகிறது.
அடுத்த ஃப்ரேமுக்கு சென்றால் சிறுத்தை திரைப்படத்தில் பாவா உக்காந்திருக்கும் வீட்டை காண்பிக்கின்றனர். போலீஸ்காரன் அப்பன் என வில்லன் கூறுவது விக்ரம் மற்றும் சிகரம் தொடு திரைப்படங்களை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பலர் வெடிகுண்டு, கன்னிவெடி என பல குண்டுகளை வைத்து தான் லாரியை கவிழ்ப்பர். ஆனால் ரஜினியோ ஒரு பிஸ்டலை வைத்து அந்த ட்ரக்கை கவிழ்க்கிறார். எல்லா ரசிகர்கள் உடலிலும் உள்ளத்திலும் கூஸ் பம்ப்ஸ் மொமெண்டை கொண்டுவரும். இந்த ஃப்ரேமையும் முதல் ஃப்ரேமையும் ஒப்பிட்டு பார்க்கையில், முக்கிய குற்றவாளி வாகனத்திற்கு பாதுகாப்பாக வருபவர்களை ரஜினியின் ஆட்கள் சுட்டு தள்ளுவதாகவும், மெயின் வில்லனை ரஜினி போடுவதாகவும் தெரிகிறது.
பின்னர், இதில் ரஜினி உண்மையான பெயர் டைகர் முத்துவேல் பாண்டியன் என கூறும் காட்சி, சிறுத்தை பட கிளைமாக்ஸில் கார்த்தி தனது பெயரை “பாண்டியன், ரத்தினவேல் பாண்டியன்” என கூறும் தோரணையில் உள்ளது. அடுத்த காட்சியில் கொஞ்சம் இதோடு நிறுத்திக்கலாம்ல என ரம்யா கிருஷ்ணன், ரஜினியிடம் சொல்லும் டயலாக், பேட்டை படத்தில் ”பார்க்க தான போக இந்த காளியோட ஆட்டத்தை” என கூறுவது போலவே தெரிகிறது. அடுத்த FRAMEல் வில்லன்களை பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டு புகையிலிருந்து ரஜினி வெளியே வருவது, துப்பாக்கி படத்தின் பாதியையும், பீஸ்ட் படத்தின் மீதியையும் வைத்தது போலவே தெரிகிறது
இறுதியாக போலீஸ் டிரஸ் போட்டுக்கொண்டு சென்ட் அடிக்கும் ரஜினியை பார்க்கையில், ஆதித்ய அருணாச்சலம் நமது கண் முன்னே வந்து செல்கிறார். ஒருவேளை இருக்குமோ !!! ஜெயிலர் எனும் டைட்டில் கார்ட் போடும்போது இது பீஸ்ட் பட டைட்டில் கார்டு போலவே தெரிகிறது, இங்கு ”அர்த்தமாயிட்டா ராஜா” என ரஜினி கேட்பது பீஸ்ட் படம் போல தான் இருக்கும், உங்களுக்கு புரிகிறதா? என ரஜினி பார்ப்பவர்களை கேட்பது போலவே தெரிகிறது. ஜெயிலர் என படத்தின் பெயரை வைத்துவிட்டு ஜெயில் சீனே இல்லையே என காத்திருக்கும் ரசிகர்களுக்காக கடைசி காட்சியில் ஜெயிலின் காட்சியை காட்டுகின்றனர்.
என்னதான் ஷோகேஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட ட்ரைலர் மாசாகவும் கிளாசாகவும் இருந்தாலும், இதில் தமன்னாவை காட்டவில்லையே என ரசிகர்கள் மனம் குமுறுகின்றனர்.
– ஆண்ட்ரூ







