விரைவில் தொடங்கும் ஜெயிலர் 2?

நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான…

நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் பெரிய எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஜெயிலர் திரைப்படம் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இதனிடையே வெளியான ஜெயிலர் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிரூத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை வழங்கினார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்தார்.

ஜெயிலர் படத்திற்குப் பிறகு நெல்சன் புதிய படத்தின் கதை தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தும் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 அன்று வெளியாகிறது.

இந்த நிலையில், லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கும் ரஜினி அதற்கு அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் இணைவார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜெயிலர் படம் வெளியாகி நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.