முழு வீச்சில் தாக்குதல் நடத்த தயாரான இஸ்ரேல்; கூட்டம் கூட்டமாக காசாவை விட்டு வெளியேறிய மக்கள்!

காஸா நகருக்குள் முழு வீச்சில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து…

காஸா நகருக்குள் முழு வீச்சில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.

அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள். கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நகருக்குள் முழு வீச்சில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.
அதற்காக, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்வதாகவும் ராணுவம் கூறியது.
அதையடுத்து, கால்நடையாகவும், கழுதை வண்டிகளிலும் அந்த நகரிலிருந்து ஏராளமானவா்கள் தெற்குப் பகுதியை நோக்கி செவ்வாய்க்கிழமை வெளியேறினா். இருந்தாலும், அந்த நகரம் உள்பட வடக்கு காஸா பகுதியில் இன்னும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருப்பதாக காஸா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.