ஆயன்குளம் அதிசய கிணறு: வெள்ளம் மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் – ஐஐடி

ஆயன்குளம் அதிசய கிணறு போன்ற எண்ணற்ற கிணறுகளை அப்பகுதியில் அமைப்பதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என ஐஐடி குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நெல்லை…

ஆயன்குளம் அதிசய கிணறு போன்ற எண்ணற்ற கிணறுகளை அப்பகுதியில் அமைப்பதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என ஐஐடி குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பின. ஆனால், ஆயன்குளம் பகுதியில் திறந்தவெளி விவசாய நிலத்தில் இருந்த கிணறு பல லட்சம் கனஅடி நீரை உள்வாங்கியும் நிரம்பாதது பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த அதிசய கிணறு தொடர்பாக நியூஸ்7தமிழ் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் வெங்கட்ராமன் சீனிவாசன் தலைமையிலான குழுவினர், அதிசய கிணற்றில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், தற்போது இது தொடர்பான ஆய்வு அறிக்கையை நெல்லை ஆட்சியர் சமீரனிடம் ஐஐடி குழுவினர் சமர்ப்பித்தனர்.

அதன் அடிப்படையில், அதிவேக மறுவூட்டல் தொழில்நுட்பம் ஒன்றை செயல்படுத்தலாம் என ஐஐடி குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். இதன்மூலம், வெள்ளம் மற்றும் வளர்ச்சியின் தீவிரத்தை குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆவியாதல் பாதிப்பின்றி நீரை சேமிக்க கீழ்நில அணையை உருவாக்கலாம் என்றும், இதன் மூலம், ஆயன்குளம் பகுதி முழுவதும் சமமாகவும் மற்றும் தானியங்கி அடிப்படையிலும் நீரை விநியோக்கிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுத்து பின்னோக்கி செலுத்த முடியும் என்றும் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் வெங்கட்ராமன் சீனிவாசன், மறுவூட்டல் திட்டத்தை பயன்படுத்தி ஆயன்குளம் கிராமத்தில் எண்ணற்ற கிணறுகள் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் லிட்டர் வரை இந்த கிணறுகளில் மறுவூட்டல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.