இறைவன் திரைப்பட ரிலீஸ் தேதி மாற்றம்?

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வாமனன், ‘என்றென்றும் புன்னகை, உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம்…

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வாமனன், ‘என்றென்றும் புன்னகை, உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘இறைவன். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. ஆகஸ்ட் 25-ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.,  . இந்நிலையில், இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.