ஐபிஎல் 2025: லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

இன்று லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் (70-வது) ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ரஜத் பட்டிதர் தலைமையிலான பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்கிறது.

லக்னோ அணி ப்ளே ஆஃபிலிருந்து வெளியேறிய நிலையில் இந்த போட்டியில் வென்றால் ஆறுதலாக இருக்கும். அதேநேரத்தில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூரு அணி இப்போட்டியில் வென்றால், 2-வது அணியாக டாப்-2 இடத்தை உறுதி செய்யும். பின்னர் குவாலியர் சுற்றில் பஞ்சாபை எதிர்கொள்ளும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.