ஐபிஎல் 2024 | CSK-க்கு எதிரான போட்டியில் SRH அணி பந்து வீச்சு தேர்வு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்பாக நடைபெற்று…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ஐ.பி.எல் தொடரின் 18 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல்.5) தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறதுஇந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில், கடைசியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  3 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது

ஹைதராபாத் அணி 7 வது இடத்தில் உள்ளது.  ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.  இதில் சென்னை அணி 14 முறையும், ஐதராபாத் அணி 5 தடவையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.