ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 257 ரன்களை குவித்துள்ளது.
16வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து லக்னோ முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைதொடர்ந்து ஆயுஷ் பதோனி களமிறங்கினார். கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிடியாக ஆடி 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 234 ரன்களை குவிந்து இந்த தொடரில் அதிக ரன்களை குவிந்தது. இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 257 ரன்கள் குவித்து சென்னை அணியை முந்தியுள்ளது.







