ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி தடுமாற்றத்துடன் விளையாடியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபுறம் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.







