பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 185 ரன்கள் சேர்த்தது.
ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டியின் 32வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜ்ஸ்தான் அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட்டு வருகின்றன. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் அளித்தனர். இதில், லீவிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற அவரையடுத்து வந்து சஞ்சு சாம்சன் 4 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களில் வெளியேற அடுத்து வந்த லோம்ரோர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார்.
அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்து கொண்டிருக்கும்போது ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அரை சதத்தை தவறவிட்டு 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து லோம்ரோர் 43 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இந்நிலையில், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 185 ரன்களை சேர்த்தது.







