ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் அடுத்த படபிடிப்பு மங்களூருவில் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அனிருந் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ஏற்கனவே வெளியான ஜெயிலர் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேர்ப்பைப் பெற்றுள்ள நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூல் மங்களூருவில் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெய்லராக நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க சிறைக்குள் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.







