இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!

ஐதராபாத்தில் இருந்து திருப்பதி சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. நடுவானில் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. திருப்பிவிடப்பட்ட இண்டிகோ…

ஐதராபாத்தில் இருந்து திருப்பதி சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

நடுவானில் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. திருப்பிவிடப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

திருப்பதி வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். விமானியின் துரித நடவடிக்கை காரணமாக 169 பயணிகள் உட்பட 177 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கட்டுள்ளனர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.