இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் – முதலிடத்தில் கோலி! அடுத்த இடங்களில் யார் தெரியுமா?

இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்து அசத்தியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி.  இவர் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகளால் பிரபலமாக இருந்து…

இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்து அசத்தியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி.  இவர் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகளால் பிரபலமாக இருந்து வருகிறார்.  அதே போல இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கால்பந்து வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்து அசத்தியுள்ளார்.  பிராண்டு மதிப்புகளின் அடிப்படையில் விராட் கோலி இந்த பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நிலையில் ரன்வீர் சிங் 2வது இடமும், ஷாருக் கான் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 176.9 மில்லியன் டாலர் இருந்த நிலையில் தற்போது அது 29 சதவிகிதம் அதிகரித்து 227.9 மில்லியன் டாலர் வரை உயர்ந்து மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலியைத் தொடர்ந்து பிராண்ட் மதிப்பின்படி 203.1 மில்லியன் டாலர் பெற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 2வது இடமும்,  ஷாருக் கான் 120.7 மில்லியன் டாலர் பெற்று 3வது இடமும் பிடித்துள்ளனர்.  இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 95.8 மில்லியன் டாலர் உடன் 7வது இடத்திலும்,  சச்சின் டெண்டுல்கர் 91.3 மில்லியன் டாலர் உடன் 8வது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.