தோல்வியடைந்த சோகத்தில் கண்ணீர்விட்டு அழுத இந்திய வீரர்கள் – ரசிகர்கள் சோகம்

தோல்வியடைந்த சோகத்தில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா…

தோல்வியடைந்த சோகத்தில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடம் தோற்று நழுவ விட்டது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றது.

இந்நிலையில் தோல்வியடைந்த சோகத்தில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.