ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய திரைப்படம்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் இந்திய திரைப்படம் ‘ALL WE IMAGINE AS LIGHT’ முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, 2024ஆம் ஆண்டில் வெளியான படங்கள், பாடல்கள்…

ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய திரைப்படம்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் இந்திய திரைப்படம் ‘ALL WE IMAGINE AS LIGHT’ முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, 2024ஆம் ஆண்டில் வெளியான படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனது மனதை கவர்ந்தவற்றை பட்டியலிட்டுள்ளார். அந்த பட்டியலில் இந்திய திரைப்படமான ‘ALL WE IMAGINE AS LIGHT’ முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இப்படத்தை பாயல் கபாடியா இயக்கியுள்ளார். கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற ‘ALL WE IMAGINE AS LIGHT’ திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.