IMAX திரைகளில் வெளியாகும் ‘இந்தியன் 2’ – லேட்டஸ்ட் அப்டேட்!

‘இந்தியன் 2‘ திரைப்படம், ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.   ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில்…

இந்தியன் 2‘ திரைப்படம், ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தியன்-2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக நாளுக்கு நாள் ஒரு அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் படத்தின் ‘காலண்டர்’ பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது.  கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தியன் 2 திரைப்பட,ம்  3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்டுள்ளது. இப்படத்திற்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.  இந்த நிலையில், இந்தியன் 2‘ திரைப்படம், ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.