அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகையே ஆளும்-சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர்

பொதுவான அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியா உலகையே ஆளும் சக்தியாக உருவெடுக்கும் என்பது எங்கள் நம்பிக்கை என்று சிஎஸ்ஐஆரின் தலைமை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார். சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி கலைச்செல்வி…

பொதுவான அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியா உலகையே ஆளும் சக்தியாக
உருவெடுக்கும் என்பது எங்கள் நம்பிக்கை என்று சிஎஸ்ஐஆரின் தலைமை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.

சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி கலைச்செல்வி சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்த சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் கலைச்செல்வி இவ்வாறு கூறினார்.
மேலும், ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளுக்கும், அதனை மக்களிடையே கொண்டு செல்லும் இந்திய தொழிற்கூடங்களுக்கும் இடையேயான கூட்டமைப்பில் சிறிது சரிவு உள்ளதாகவும் அதனை வலுப்படுத்தினால் இந்திய நாட்டை அறிவியல் தொழிற்நுட்பத்தில் எல்லா வகையிலும் பரிமளிக்க வைக்க முடியும் என்றும் உறுதிபட அவர் கூறினார்.
சமீப காலமாக கல்வித் துறையிலும், ஆராய்ச்சி துறையிலும் பெண்களின் ஆர்வம்

அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், அதனை முறையாக ஊக்குவித்தால் உலக அரங்கில் அறிவியலில் இந்தியா வல்லரசாகும் என்று கூறிய தலைமை இயக்குனர் கலைச்செல்வி,
விண்வெளி ஆராய்ச்சி துறையிலும்,கணினித் துறைகளும் இந்தியாவின் வளர்ச்சியை
உலகம் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது என்றார்.

விஞ்ஞானம், ஆன்மீகம் குறித்த கேள்விக்கு,  “விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் நான் இரு பிரிவுகளாக பார்க்கவில்லை. இரண்டையும் மனப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.