இந்திய விமானப்படை தினம்; தலைவர்கள் வாழ்த்து

89வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விமானம், கப்பல், ராணுவம் உள்ளன. இவற்றில், விமானப்படை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அக்டோபர் 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து…

89வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விமானம், கப்பல், ராணுவம் உள்ளன. இவற்றில், விமானப்படை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அக்டோபர் 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னரும் விமானப்படை தொடங்கப்பட்ட நாளான அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று 89வது இந்திய விமானப்படை தினம் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ஹிண்டன் விமானப்படை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இந்தியக் கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வீரதீர செயல்புரிந்த விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது வழங்கப்பட்டது. முன்னதாக வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.